திண்டுக்கல் அருகே லாரி மோதி காவலர் பலி!

 

திண்டுக்கல் அருகே லாரி மோதி காவலர் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் தெய்வராசு (34). இவர் நேற்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ஒட்டன்சத்திரம் அடுத்த பொருளூர் மங்கை அம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக தெய்வராஜ வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி மோதி விபத்திற்கு உள்ளானது.

திண்டுக்கல் அருகே லாரி மோதி காவலர் பலி!

இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டத்தில் படுகாயமடைந்த காவலர் தெய்வராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.