திண்டுக்கல்லில் கார் திடீரென தீ பற்றியதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பலி!

 

திண்டுக்கல்லில் கார் திடீரென தீ பற்றியதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஓய்வுபெற்ற ஊரக வளர்த்துறை இணை இயக்குநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் குப்புசாமி (75). ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர். இவரது மனைவி ராமாத்தாள். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், குப்புசாமி இன்று அதிகாலை தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, காரில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது.

திண்டுக்கல்லில் கார் திடீரென தீ பற்றியதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பலி!

இதில் வாகனத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட குப்புசாமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்த தீயைணைப்பு வீரர்கள் மற்றும் திண்டுக்கல் மேற்கு போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காரில் ஏசியை ஆன்செய்த போது அதிலிருந்து திடீரென தீப்பற்றியதால் விபத்து ஏற்படடது தெரியவந்தது.