தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி தலைவர்

 

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி தலைவர்

தர்மபுரி

தர்மபுரி அருகே ஆயுதபூஜைக்கு பஞ்சாயத்து தலைவர் தனது சொந்த செலவில் புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்படட வட்டுவனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவராக மாதம்மாள் என்பவர் இருந்து வருகிறார்.

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி தலைவர்

கடந்த ஞாயிறு அன்று, வட்டுவனஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மைக் காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும், ஊராட்சி தலைவர் மாதம்மாள், தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட புதிய ஆடைகளையும், பொரி, பழம் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி தலைவர்

கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தொற்று பரவலை தடுக்க பாடுபட்ட பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக தன்னால் இயன்ற பரிசை வழங்கியதாக மாதம்மாள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பணியாற்றும் தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.