அரூரில் அம்மன் கோவில் மேற்கூரையை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

 

அரூரில் அம்மன் கோவில் மேற்கூரையை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

தருமபுரி

அரூர் அருகே கோவில் மேற்கூரையை உடைத்து 27 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரில் ஊஞ்சல் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக பரிமளா என்பவர் உள்ளார். இவர் கடந்த வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரத பூஜைக்காக அம்மனை தங்க நகைகாளல் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்துள்ளார். தொடர்ந்து, நேற்று பவுர்ணமி பூஜை செய்வதற்காக நகைகளை கோவிலில் உள்ள பரோவில் வைத்து பூட்டி சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று அதிகாலை பூஜைக்காக வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும், கோவில் மேற்கூரையும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்றபோது கோவிலில் இருந்த 2 பீரோக்களை உடைத்து, அம்மனின் தங்க நகைகள், காசுமாலை, மூக்குத்திகள், 2 வெள்ளி ஒட்டியானம், வெள்ளி முக கவசம், பஞ்சலோக முக கவசம் உள்ளிட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அரூரில் அம்மன் கோவில் மேற்கூரையை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

மேலும், கோயில் உண்டியல், நவ கிரக சிலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த ரூ.30,000 பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பரிமளா அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் கொள்ளை நடைபெற்ற கோவிலை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர்.

தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரூர் போலீசார், நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் மேற்கூரையை உடைத்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.