ஈரோட்டில் உள்ள கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் திரளானோர் மாலை அணிவிப்பு!

 
ayyappa

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி நேற்று ஈரோட்டில் உள்ள கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் திரளானோர் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும்  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை மாலை அணிவித்து விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கொரோனோ அச்சம் காரணமாக சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளாக கணிசமாக குறைந்து உள்ளது.இந்தாண்டு கொரோனோ கொரோனோவின் தாக்கம் குறைந்து உள்ளதை அடுத்து மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை  மாலை திறக்கப்பட்டது.

ayyappa

தொடர்ந்து, கார்த்திகை 1ஆம் தேதியான நேற்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனிதநீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். ஈரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில்கள் மட்டுமின்றி பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கி உள்ளனர். கருங்கல்பாளையம் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் அதிகாலை 450 ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது விரதத்தை தொடங்கினர். ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ayyappaகொரோனோ தாக்கம் குறைந்து உள்ளதை  அடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கொரோனோ பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு, தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளும் பக்தர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளன.