வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 200 பேருக்கு கொரோனா தொற்று!

 
vellore cmc

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வேலூரில் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என 10 ஆயிரத்து 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமனோர் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்வர். 

corona virus

இந்த நிலையில், சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, அனைவருக்கும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

200 பேருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன்பு செய்வது நிறுத்தி, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளார். மேலும், புறநோயாளிகள் பிரிவில் தவிர்க்க இயலாத பாதிப்புகளுடன் வருவோருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் 315 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.