ஆரணியில் தனியார் ஓட்டலில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 
arani

ஆரணியில் தனியார் உணவகத்தில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீபாலாஜி பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தடுபபு நடவடிக்கையாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

corona

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவக வளாகத்தில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள்‌, ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன்‌ ஆகியோர் முன்னிலையில், ‌வட்டாட்சியர்‌ பெருமாள்‌ குறிப்பிட்ட உணவகத்தை பூட்டி சீல்‌ வைத்தார்‌.