16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

 
Child marriage

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கட்டிட தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த காகம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (28). கட்டிட தொழிலாளி . இவருக்கு ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், சம்பவத்தன்று அந்த சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை காட்டி அவரை கடத்திச்சென்று தாமோதரன் திருமணம் செய்துகொண்டார். மேலும், அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

arrested


சிறுமி மாயமானதால் அவரை பல்வேறு இடங்களில் தேடிய பெற்றோர், பின்னர் அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கட்டிட தொழிலாளி தாமோதரன்  சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.