நடிகர் சூர்யா மீது குமரி மாவட்ட பாமக சார்பில் புகார்!

 
kumari

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வலியுறுத்தி குமரி மாவட்ட பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

பாமக  மாநில துணை பொதுச்செயலாளர் ஹில்மன் புரூஸ்எட்வின் தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்,ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசத்தை அவமதிக்கும் விதமாகவும், மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் பெயரை காவல் ஆய்வாளருக்கு வைத்து களங்கம் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

surya

இது வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பாமகவினர், எனவே ஜெய்பீம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மனு அளித்தபோது, பாமக மாநில துணை தலைவர் ஐசியாஸ் மிசா, மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில இளைஞர் சங்க செயலாளர் வேல்ராஜ் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஞானராஜ் உள்ளிட்ட  ஏராளமானோர் உடனிருந்தார்.