ஜெய்பீம் பட விவகாரம் - நடிகர் சூர்யா மீது மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார்

 
surya

ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கோரி தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில், பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறு பரப்பும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்கு நடிகர் சூர்யா மன்னிப்புக்கோரவும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகிறது.

dharmapuri ttn

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில், காரிமங்கலம் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய அக்னி கலசத்தை தவறாக காட்டுதல் மற்றும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் பெயரை தவறாக பயன்படுத்துதல் மற்றும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெய்பீம் திரைப்படத்தின் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். இதில் மாவட்ட துணை செலாளர் முருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவன், இளைஞரணி நிர்வாகி சங்கர், வீரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.