கோவை குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதால் நோய் தொற்று பரவும் அபாயம்!

 

கோவை குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதால் நோய் தொற்று பரவும் அபாயம்!

கோவை

கோவை மாநகரில் உள்ள புட்டுவிக்கி குளக்கரையில் மர்மநபர்கள் மருத்துவக்கழிவுகளை கொட்டிச்சென்றதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கோவை மாநகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவக்கழிவுகளை எரியூட்ட பிரத்யே மையம் செல்பட்டு வருகிறது. தனியார் அமைப்புகள் மருத்துவக்கழிவுகளை சேகரித்து எரியூட்டும் பணியினை மருத்துவமனைகளிடம் இருந்து கட்டணம் பெற்று மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதும், சில சிறிய தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக்கழிவுகளை முறையாக அகற்றாமல், அவற்றை நீர்நிலைகளில் கொட்டுவது நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை செல்வபுரம் அடுத்த புட்டுவிக்கி பாலம் அருகே நொய்யல் ஆறு செல்லும் வழியில் குளக்கரையில் நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்றுள்ளனர். இதில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் குளக்கரை அருகே திறந்தவெளியில் கொட்டப்பட்டு உள்ளன. திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் தங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதால் நோய் தொற்று பரவும் அபாயம்!

எனவே, இந்த மருத்துவக்கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அதனை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்கடம் பெரியகுளத்தில் மர்மநபர்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டிச்சென்ற நிலையில், அந்த பகுதி மக்கள் புகாரின் பேரில் அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தற்போது மீண்டும் குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.