கோவையில் கோவில் இடிப்புக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்… அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கைது!

 

கோவையில் கோவில் இடிப்புக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்… அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கைது!

கோவை

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தின் கரையில் இருந்த பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதற்கு பல்வேறு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் கோவில் இடிப்புக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்… அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கைது!

இதில், அந்த கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அங்காளம்மன் உருவ படத்தை ஏந்திய படி வாத்தியங்கள் முழங்க சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், திடீரென தடாகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைதுசெய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர். கைது நடவடிக்கைக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பழமை வாய்ந்த கோவிலை இடித்ததால் தங்களது ஆன்மீக நோக்கம் புன்பட்டிருப்பதாகவும், எனவே இடிக்கப்பட்ட இடத்தில் சிறிய அளவில் மீண்டும் கோவில் கட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். .