கோவையில் ஒரே பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… தெருவுக்கு சீல் வைப்பு!

 

கோவையில் ஒரே பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… தெருவுக்கு சீல் வைப்பு!

கோவை

கோவை அவினாசி ரோட்டில் உள்ள அத்திக்குட்டை பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதி இரும்பு தகடுகளை கொண்டு அடைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கோவை மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி பகுதியில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று உறுதியானவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

கோவையில் ஒரே பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… தெருவுக்கு சீல் வைப்பு!

மேலும், பாதிப்பு அதிகளவில் கண்டறியப்படும் பகுதிகளை தனிமைப்படுத்தி இரும்பு தகரம் வைத்து அடைத்தும் வருகிறனர். அந்த வகையில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் 56 பேருக்கு தொற்று உறுதியானதால், அந்த பகுதி முழுமையாக அடைக்கப்பட்டது. இந்த நிலையில், கோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே உள்ள அத்திக்குட்டை பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்திக்குட்டை பகுதியில் 500 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தகரம் வைத்து அடைத்தனர். மேலும், அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சுகாதார பணியாளர்கள் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.