“திமுகவினர் செய்த கொலைகள் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

 

“திமுகவினர் செய்த கொலைகள் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

கோவை

அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும், திமுகவினர் செய்த கொலை வழக்குகள் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். கோவை தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

மேலும், ஸ்டாலினுக்கு ஒன்றரை லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஊழல் என்றாலே திமுக தான் என்றும், ஊழல் நாயகன் என்றால் ஸ்டாலின் தான் எனவும் தெரிவித்தார். ஸ்டாலின் படத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக நடிக்கலாம் எனவும், நிஜத்தில் முதல்வராக முடியாது என்றும் அவர் கூறினார்.

“திமுகவினர் செய்த கொலைகள் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

வன்முறையும், திமுகவும் ஒன்றாக பிறந்தவை என்று குற்றம்சாட்டிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவின் கதையை, இந்த தேர்தலோடு முடிக்க வேண்டும் எனவும் சூளுரைத்தார். முன்னதாக கூட்டத்தில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பிரிந்த கட்சியை ஒன்று சேர்த்ததால், தன் மீது கோபத்தில் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நடிகை விந்தியா, மக்களுக்காக வாழ்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனவும், அடுத்தவர்களை குறை சொல்லி வாழ்வபர் ஸ்டாலின் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரமில்லை என தெரிவித்தார்.