“சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு” – கோவை மாநகர காவல்துறை!

 

“சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு” – கோவை மாநகர காவல்துறை!

கோவை

கோவையில் சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீதும் மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவை, நல்லாம்பாளையத்தை சோ்ந்தவா் நந்தகுமாா். இவரது 13 வயது மகன், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் சிறுவன் தனது தந்தையின் வாகனத்தை நகருக்குள் ஓட்டிச் சென்றுள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாநகர போக்குவரத்து போலீசார், சிறுவனை பிடித்து விசாரித்ததில் அவருக்கு 13 வயதே ஆனது தெரியவந்தது.

“சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு” – கோவை மாநகர காவல்துறை!

இதனை அடுத்து, சிறுவர் மீதும், அவருக்கு வாகனத்தை ஓட்ட வழங்கிய பெற்றோா் மீதும் மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதேபோல, சிறுவா்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீதும் மோட்டாா் வாகன வழக்குப் பதிவு செய்யப்படும் என மாநகர காவல்துறை எச்சரித்து உள்ளது.

முன்னதாக கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, நகரில் பல்வேறு இடங்களில் வேகக் கட்டுபாடு விதிக்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறி அதிவேகமாக செல்வோர் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து, அபாரதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.