விபத்து ஏற்படுத்தியவரை ஜாமினில் விடுவிக்க லஞ்சம்… காவல் ஆய்வாளர், தலைமை காவலர் சஸ்பெண்ட்!

 

விபத்து ஏற்படுத்தியவரை ஜாமினில் விடுவிக்க லஞ்சம்… காவல் ஆய்வாளர்,  தலைமை காவலர் சஸ்பெண்ட்!

கோவை

கோவையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிணையில் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர், தலைமை காவலர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பிரிவில் கடந்த 20ஆம் தேதி காரும் – இருசக்கர வாகனமும் மோதிகொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கைதான ஓட்டுநர் சுரேஷை ஜாமினில் விடுவிக்க, கார் உரிமையாளரிடம், கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாஜலம் ஆகியோர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால், கார் உரிமையாளர் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

விபத்து ஏற்படுத்தியவரை ஜாமினில் விடுவிக்க லஞ்சம்… காவல் ஆய்வாளர்,  தலைமை காவலர் சஸ்பெண்ட்!

இந்த நிலையில், ஜாமினில் விடுவிக்க கூடுதல் பணம் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து கார் உரிமையாளர், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் சுரேஷ், தலைமை காவலர் வெங்கடாஜலத்திடம் மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரெத்தினம் விசாரணை மேற்கொண்டார்.

அதில், இருவரும் லஞசம் பெற்றது உறுதியானதை அடுத்து, இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி, மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரெத்தினம் உத்தரவிட்டார். இந்த நிலையில், சில மணி நேரங்களில் புகாருக்கு உள்ளான ஆய்வாளர் சுரேஷ், தலைமை காவலர் வெங்கடாஜலத்தை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆணையிட்டார்.