பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்வரிடம் மனு அளித்த தூய்மை பணியாளர்கள்!

 
cm mkstalin

2 நாள் பயணமாக கோவை வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தங்களை பணி நிரந்தம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்தார். அவருக்கு கோவை விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் வ.உ.சி மைதானம் வரையிலான பகுதிகளில் சாலையின் இருபுறமும் கூடி நின்ற திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

cmcbe

தொடர்ந்து, அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் கூடியிருந்த 100-க்கும் மேற்பட்ட பீளமேடு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், முதல்வரை சந்தித்து தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கினார். இதனிடையே, முதல்வர் வருகையையொட்டி, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட போலீசார் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.