கார் மோதி 9 ஆடுகள் பலி – நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!

 

கார் மோதி 9 ஆடுகள் பலி – நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!

சென்னை

சென்னை பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. பூந்தமல்லி அடுத்த மேல்மா நகர் பகுதியை சேர்ந்த ராஜி மற்றும் ஜீவா ஆகியோர், தங்களது வீடுகளில் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் அருகேயுள்ள வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

கார் மோதி 9 ஆடுகள் பலி – நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!

இந்நிலையில், இன்று மதியம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மீண்டும் வீடு திரும்புவதற்காக பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்துசென்றன. அப்போது, அவ்வழியே வந்த கார் ஒன்று ஆடுகள் மீது அதிவேகமாக விட்டு, நிற்காமல் தப்பிச்சென்றது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் இருவரும், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.