வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

 
cbe attack

கோவையில் இளைஞர் ஒருவர், தனது வளர்ப்பு நாயை கொடூரமான முறையில் தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிட்கோ அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வளர்ப்பு நாயை நாள்தோறும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பகுதி பொதுமக்கள், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு புகார் அளித்தனர். அதன் பேரில், அவரது வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது சதீஷ், தனது வளர்ப்பு நாயை கொடூரமான முறையில் தாக்குவது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தது.

1

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சதீஷ் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சதீஷ் தனது வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.