கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதல் - புதுமாப்பிள்ளை பலி!

 
accident

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்திற்குள்ளானதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சீனிவாசலு (38). இவர் தனது உறவினர்களான கனிமொழி, சுமலதா மற்றும் ரிஷிகா ஆகியோருடன் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறமாக அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

krishnagiri

மேலும், படுகாயமடைந்த கனிமொழி உள்ளிட்ட 3 பெண்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த காந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சீனிவாசலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சீனிவாசலுவுக்கு நேற்று முன்தினம் தான் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரே நாளில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.