தூர்வாரும் பணியின்போது சேதமடைந்த கால்வாய் பாலம்... கங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆய்வு!

 
erode

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூர்வாரும் பணியின்போது சேதமடைந்த பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பாலத்தை விரைந்து சீரமைக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். 

ஈரோடு மாநராட்சி வார்டு எண் 57 கிருஷ்ணா தியேட்டர் அருகில்,லட்சுமி நாராயண் நகர் முகப்பில் உள்ள கான்கிரீட் பாலம் கடந்த மாதம் கழிவுநீர் கால்வாய் துர்வாரூம் பணியின்போது சேதமடைந்தது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லும்போதும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால், சேதமடைந்த கான்கிரீட் பாலத்தை விரைவாக புதுபித்து தருமாறு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கோரிக்கை விடுத்தார். 

erode

இந்த நிலையில், புகார் தெரிவித்த அடுத்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா சேதமடைந்த கான்கிரீட் பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர், உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பாலத்தை உடனடியாக சீர் செய்யும்படி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்தில் மாநராட்சி அலுவலர்கள் பாலத்தின் இருபுறமும் மணல் கொட்டி தற்காலிகமாக சரிசெய்தனர். மேலும், 1 வார காலத்தில் பாலத்தை புதுபிக்கும் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.