பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை, பணம் கொள்ளை!

 
robbery

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காமராஜ் (64). ஓய்வுபெற்ற கரும்பு ஆலை ஊழியர். இவருக்கு திடீரென உடல்நலன் பாதிக்கப்பட்டதால், வீட்டை பூட்டிவிட்டு மனைவி அம்பிகாவுடன் நேற்று காலை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மதியம் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.  இதனை கண்ட  அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காமராஜூக்கு தகவல் அளித்தனர்.  

perambalur

இதனை அடுத்து, காமராஜும், அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது, மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அறையில் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காமராஜ்  இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.