சாக்கடையில் வீசப்பட்ட சிசு! சேலத்தில் அதிர்ச்சி

 
ச்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சாக்கடையில் வீசப்பட்ட சிசுவை போலீசார் மீட்டெனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது ஜலகண்டாபுரம் பேரூராட்சி. இன்று  தூய்மை பணியாளர்கள்  ஜலகண்டபுரத்தில் உள்ள காமராஜர் நகரில்  சாக்கடையில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் சாக்கடையில் கிடந்தது. இதுகுறித்து ஜலகண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமிக்கும் ஜலகண்டாபுரம் போலீஸாருக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்  சம்பவ இடத்திற்கு  வந்தனர். சாக்கடையில் இறந்து கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை மீட்டனர். ஆண் சிசு பிறந்து 3 மாதம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜலகண்டாபுரம் போலீசார் குழந்தை கள்ளத்தொடர்பு பிறந்ததால் சாக்கடையில் குழந்தை உயிரோடு வீசி கொலை செய்யப்பட்டதா அல்லது குழந்தை இறந்ததால் சாக்கடை வீசப்பட்டதா? சாக்கடையில் வீசியது யார்? என்று  விசாரித்து வருகின்றனர். சாக்கடையில் பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம் ஜலகண்டாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.