தென்காசி அருகே ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை… வழக்கறிஞர் வெறிச்செயல்!

 

தென்காசி அருகே ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை… வழக்கறிஞர் வெறிச்செயல்!

தென்காசி

தென்காசி அருகே முன்விரோதம் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி அடுத்துள்ள அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமகிருஷ்ணன் (41). லோடு ஆட்டோ ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சதீஷ்குமார். உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்த சூழலில், நேற்று இரவு ராமகிருஷ்ணனின் வீட்டின் அருகே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

தென்காசி அருகே ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை… வழக்கறிஞர் வெறிச்செயல்!

இதில் சதீஷ்குமார், ராமகிருஷ்ணனை கீழே தள்ளி, அவரை காலால் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை உறவினர்கள் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, வழியிலேயே ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தென்காசி போலீசார், ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வழக்கறிஞர் சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.