ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

 
dead

ராஜபாளையம் அருகே ஆழ்துளை கிணறு மோட்டாரை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர்  ஆழ்துளை கிணறுகளை பழுதுநீக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை ராஜபாளையம் அடுத்த நாக்கனேரி மகிளா குளக்கரை பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மோட்டாரை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

rajapalayam

அப்போது, எதிர்பாராத விதமாக முத்துக்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  முத்துகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து குறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.