மனைப்பிரிவு, கட்டிட அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

 
collector

சேலம் மாவட்டத்தில் மனைப்பிரிவு அனுமதி, கட்டிட அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சேலம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைப்பகுதிகளில் அமையும் உத்தேச மனைப்பிரிவு அனுமதி, கட்டிட அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் ஆகிய விண்ணப்பங்களை நேரில் பெறப்பட்டு திட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அரசால் https://onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பம் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

slm

எனவே பொதுமக்கள் மற்றும் நில மேம்பாட்டாளர்கள் உத்தேச மனைப்பிரிவு அனுமதி, கட்டிட அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் போன்ற உத்தேசங்களுக்கு https://onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெற்று பயனடையலாம், இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.