பெற்றோர் மதுஅருந்த பணம் தராததால் வேன் ஓட்டுநர் தற்கொலை... கரூரில் சோகம்!

 
suicide

கரூரில் மது அருந்த பெற்றோர் பணம் தராததால் வேன் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள செஞ்சேரி வலசு கிராமத்தை சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் ஆனந்தகுமார் (34). இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தகுமார் குடிக்க பணம் கேட்டு பெற்றோரிடம் அடிக்கடி தொல்லை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது தாயிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

karur

அப்போது, அவரது தாய் பணம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஆனந்தகுமார் அன்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.  இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆனந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தென்னிலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து தந்தை திருமலை புகாரின் அடிப்படையில் தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மது அருந்த பெற்றோர் பணம் தராததால் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.