ஒசூர் வழியாக காரில் குட்கா கடத்திய இருவர் கைது ; ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா, கார் பறிமுதல்!

 
gutka

ஓசூர் வழியாக தென்காசிக்கு காரில் குட்கா பொருட்களை கடத்திய இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி சோதனைச்சாவடியின் அருகே நேற்று சிப்காட் காவல் நிலைய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களுருவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த காரை சந்தேகத்தின பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

hosur checkpost

இதனை அடுத்து, காரில் 5 மூட்டைகளில் இருந்த சுமார் 165 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இவற்றை கடத்தியது தொடர்பாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முத்து கிருஷ்ண பாண்டியன்(29), சிவா (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களுருவில் இருந்து விற்பனைக்காக குட்காவை தென்காசிக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது..