நத்தத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
natham

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தமிழ்செல்வன், குறளரசன். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் திண்டுக்கல் சாலையில் இருந்து நத்தம் பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நத்தம் டார்லிங் ஷோரூம் அருகே சென்றபோது முன்னாள் சென்ற நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமதா என்ற பெண் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் தமிழ்செல்வன், குறளரசன் மற்றும் முகமதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

accident

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர் அவர்களை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.