சிறுமியை 2-வது திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
pocso

தென்காசி மாவட்டம் கடையம் அருகே 17 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (28). தொழிலாளியான இருவருக்கு கடந்தத 2 ஆண்டுகளுக்கு முன் திருணம் நடைபெற்றது. தற்போது செல்வம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அப்போது அங்கு பணிபுரிந்த கடையம் அடுத்த மேலமாதபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் செல்வம், சுரண்டையில் உள்ள கோவிலில் வைத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

arrested

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.