ஜாதகம் சரியில்லை என பெண் கொடுக்க மறுப்பு... விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருப்பூரில் ஜாதகம் சரியில்லை என கூறி உறவினர்கள் பெண் கொடுக்க மறுக்கததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சௌந்தரராஜ் (28). இவர் திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் உள்ள கோழி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சௌந்தரராஜ், தனது உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து இருவரது வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனிடையே திருமணத்திற்காக ஜாதகம் பார்த்தபோது பொருத்தம் சரியில்லை கூறி, பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சௌந்தரராஜ் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த சௌந்தரராஜ், தினசரி மார்க்கெட்டில் உள்ள கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

tiruppur

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்த நிலையில், ஜாதகம் சரியில்லை என திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும், வாழப்பிடிக்காததால தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.