ஆம்பூரில் வீட்டின் முன் நின்ற பைக்கை திருடிச்சென்ற மர்மநபர்... சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை!

 
ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, மர்மநபர் ஒருவர் திருடிச்செல்லும் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கந்தபொடிக்காரர் தெருவில் வசித்து வருபவர் அஃபான். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அஃபான் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வீட்டில் தூங்கியுள்ளர். தொடர்ந்து, நேற்று காலை அவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அஃபான் தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

ambur

அதில், இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவன், இருசக்கர வாகனத்தை நீண்ட நேரமாக நோக்கமிடுவதும், பின்னர் சிசிடிவி கேமராவை திருப்பி இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அஃபான்,  ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.