பெருந்துறை அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுமிக்கு, அதிமுக சார்பில் ரூ.51 ஆயிரம் நிதியுதவி!

 
peru

பெருந்துறை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்கு, அதிமுக சார்பில் ரூ.51 ஆயிரம் உதவி தொகையை அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு புதூர் காலனியில் வசிக்கும் கூலி தொழிலாளியின் மகள் சிறுமி ஈஸ்வரி.  தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, சிறுமி ஈஸ்வரி பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார், நேற்று கிழக்குபுதூர் காலனிக்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து அவரது சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

peru

மேலும், சிறுமியின் சிகிச்சைக்காக தனது நிதியாக ரூ.25,000 வழங்குவதாக தெரிவித்தார். அப்போது, அவருடன் வந்த அதிமுக ஒன்றிய செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் தங்களது பங்குகளாக தனித் தனியாக நிதி அளித்தனர். இதன்படி அதிமுக சார்பாக ரூ.51 ஆயிரத்து 500  பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், விஜயன் என்கிற ராமசாமி, தனசேகரன், இளைஞரணி வேட்டுவபாளையம் அருணாச்சலம், எம்ஜிஆர் மன்றம் ஏ.கே.சாமிநாதன், திங்களூர் எஸ் கந்தசாமி, பொன்முடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு, மாணவரணி மணிகண்டன், போல நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சோமு, ஒன்றிய துணை தலைவர் உமா மகேஸ்வரன், நகர செயலாளர் சரன், இளைஞரணி விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.