மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கம்!

 
namakkal

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி நேற்று துவங்கிய நிலையில், நடப்பாண்டு 1.7 லட்சம் டன் அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், எம்பி-க்கள் ராஜேஸ்குமார்,  சின்ராஜ் ஆகியோர் பங்கேற்று அவரை பணிகளை தொடங்கி வைத்தனர்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு1,445 நடவு கரும்பும், 2561 ஏக்கர் மறுதாம்பு கரும்பும் என 4,006 ஏக்கர் பரப்பிற்கு பதிவு செய்யப்பட்ட 1.70 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்வர் உத்தவின்படி சென்ற ஆண்டில் அரவை செய்யப்பட்ட 2,08,823 டன்கள் கரும்பிற்கான ரூ.57.53 கோடி கிரயத்தொகை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 2021-22 அரவை பருவத்தில் ஆலை அரவைக்கு கரும்பு அனுப்பிய அங்கத்தினர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.195 வீதம் மொத்தம் ரூ.2.83 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

namakkal

தற்போது கரும்பு சாகுபடி செய்ய பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த நவீன இயந்திரங்கள் உள்ளதால், இயந்திரங்களை கொண்டு கரும்பு சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக மகசூல் மற்றும் வருமானம் ஈட்டலாம். மேலும், 2022-23 கரும்பு நடபு பருவத்தில் அதிக மகசூல் தரக்கூடிய கோ.86032, கோ.11015, கோ.க.13339 மற்றும் கோ.கு.6 போன்ற புதிய ரக கரும்புகளை கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும்  வகையில் 4.5 அடி பார் முறையில் நடவு செய்து அதிக மகசூல் பெறலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், மேலாண்மை இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, ஆத்மா குழு தலைவர் நவலடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.