மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிய சேலம் ஆட்சியர்!

 
slm

சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கை, கால்களை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா,  சாதிச்சான்று, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  குறித்து 302 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் 10 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் வழங்கிய மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய ஆட்சியர் கார்மேகம், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.  

slm

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கைகளும் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.03 லட்சம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். இந்த கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் வாகா சங்கத் பல்வந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மயில் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.