மதுரையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கல்!

 
mdu

மதுரையில் பாதாள சாக்கடை பணியின்போது மண்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35). இவர் நேற்று மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி சக்திவேல் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

madurai

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கோவையை சேர்ந்த தனியார் கட்டிட நிறுவன உரிமையாளர், மேலாளர், மேற்பார்வையாளர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்தினருக்கு, மதுரை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் இன்று வழங்கினர்.