தேவகோட்டை அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!

 
murder

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கனகம்(65). இவரது மகன் குமார். இவருக்கு வேலுமதி (35) என்ற மனைவியும், மூவரசு (12) என்ற மகனும் உள்ளனர். குமார் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், கனகம், தனது மருமகள் மற்றும் பேரனுடன் கண்ணங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கனகத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், அங்கு தூங்கிக்கொண்டிருந்த கனகம், வேலுமதி, மூவரசு ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு 46 பவுன் நகைகளை திருடிச்சென்றனர். இதில் வேலுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கனகம், மூவரசு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.dead bodyதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவக்கோட்டை போலீசார், இறந்த வேலுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று கனகம் பரிதாபமாக உயிரிந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.