சாலையில் கிடந்த 10 பவுன் தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு போலீசார் பாராட்டு!

 
periyakulam

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சாலையில் கிடந்த 10 பவுன் தங்கசங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு, போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை சுப்பிரமணிய சாவடி தெரு பகுதியில்  நேற்று முன்தினம் முத்துப்பாண்டி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கீழே பர்ஸ் ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது. அதனை முத்துப்பாண்டி எடுத்து திறந்து பார்த்தபோது, பர்சில் 10 பவுன் மதிக்கத்தக்க தங்க செயின் இருந்துள்ளது. அதனை தவறவிட்ட நபரிம் ஒப்படைக்க விரும்பிய முத்துப்பாண்டி, பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சியிடம் செயினை வழங்கி அதனை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

periyakulam

இதனை தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில் அந்த செயின் பெரியகுளம் மூன்றாந்தாள் பகுதியை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, பாண்டிசெல்வியை காவல் நிலையம் வரவழைத்த போலீசார்,  பெரியகுளம் டிஎஸ்பி கீதா முன்னிலையில் 10 பவுன் தங்க செயினை முத்துப்பாண்டி அவரிடம் ஒப்படைத்தார். தங்க நகை பெற்றுக்கொண்ட பாண்டிச்செல்வி, முத்துப்பாண்டிக்கும், காவல்துறையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.