தேவக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் - ஒருவர் பலி!

 
devakottai

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் எடிசன். இவர் நேற்று தேவக்கோட்டையில் இருந்து முப்பையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முப்பையூர் சந்திப்பு பகுதியில் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையை கவனக்குறைவாக கடக்க முயன்றார். அப்போது, மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நோக்கி பாதிரியார் ஜான் திரவியம் என்பவர் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக சேவியர் எடிசன் வாகனம் மீது அதிவேகமாக மோதியது.

accident

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சேவியர் எடிசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவக்கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.