குமரி அருகே கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

 
poison

கன்னியாகுமரி அருகே கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் அன்புவிஜய் ஞானஜோதி (29). கன்னியாஸ்திரியான இவர் கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இதற்காக அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு அன்புவிஜய் ஞானஜோதி திடீரென தனது வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அறையில் தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள் மீட்டு நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

kumari gh

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்பு விஜய் ஞானஜோதி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் இரணியல் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து  ன்புவிஜய் ஞானஜோதியின் அக்கா ஜோதி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், வழக்குப்பதிவு செய்து கன்னியாஸ்திரி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.