ஈரோடு அருகே வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 
dead body

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே தனியார் மில்லில் பணிபுரிந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியை சேர்ந்தவர் தன்செய்குமார் குப்தா(25). இவர் தனது சகோதரர் ஆனந்தகுமார் குப்தா என்பவருடன், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இருவரும் மில்லில் உள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

nambiyur

இதனிடையே, சரியாக வேலை பார்க்காததால் தன்செய்குமார் குப்தா, ஆனந்தகுமார் குப்தா ஆகிய இருவரையும் கடந்த 10ஆம் தேதி மில் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியது. இதனால், கடந்த 11ஆம் தேதி ஆனந்தகுமார் குப்தா, மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். தனசெய்குமார் குப்தா, மறுநாள் செல்வதாக கூறி மில் விடுதியில் தங்கியுள்ளார். அன்றிரவு அதிக மதுபோதையில் விடுதிக்கு வந்த தன்செய்குமார் குப்தா, வியாழக்கிழமை காலை திடீரென திடீரென மயங்கி விழுந்தார்.

 இதனை கண்ட, விடுதி ஊழியர்கள் அவரை மீட்டு நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், தனசெய்குமார் குப்தா வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நம்பியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.