ஈரோட்டில் உலக நன்மைக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

 
muslims

ஈரோடு மொடக்குறிச்சி அருகே உலக நன்மைக்காக வேண்டி நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கருந்தேவன் பாளையத்தில் இஸ்லாமிய ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இஸ்திமா என்னும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் தலைச்சிறந்த இஸ்லாமிய உலமாக்கள் பங்கேற்று ( அல்லாஹ் ) இறைவனை குறித்தும், இறைத்தூதர் நபிகள் நாயகம் வாழ்வியல் குறித்தும், நபி தோழர்களின் வரலாறு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

muslims

அத்துடன், நபிகள் நாயகம் வாழ்வியலைப் போலவே, ஒவ்வொரு இஸ்லாமியர் வாழ்விலும் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, உலக நன்மைக்காக வேண்டியும், பெருந்தொற்று நோய்களில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நெசவுத் தொழில் சிறப்படைய வேண்டியும் சிறப்புத் தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.