தருமபுரியில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 
suicide

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் 2ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் இளம்பரிதி(21). இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 2ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் சரியாக படிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலாம் ஆண்டு தேர்வில் அவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், சடலமாக தொங்கினார். இது குறித்து விடுதி நிர்வாகம் சார்பில் தருமபுரி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

dharmapuri gh

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், மருத்துவப்படிப்பை சிரமமாக உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.