பெருந்துறை தொகுதி மக்களுக்கு அமரும் இருக்கைகள் வழங்கிய எம்எல்ஏ ஜெயக்குமார்!

 
jaya

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி கம்புளியம்பட்டி ஆதி திராவிடர் காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அமரும் இருக்கைகளை அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் காலனி மக்களுக்கு வீடுதோறும், உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் அமரும் இருக்கைகள் வழங்க எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் திட்டமிடப்பட்டு, இதுவரை 10-க்கும் மேற்பட்ட காலனிகளுக்கு இருக்கைகளை வழங்கி உள்ளார். இதனை தனது சொந்த நிதியில் இருந்து எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் வழங்கி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு பெருந்துறை தொகுதி கம்புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரண்டமடை காலனியில் வசிக்கும் ஆதி திராவிடர் காலனி மக்களுக்கு அமரும் இருக்கைகள் வழங்கப்பட்டன. 

jaya

இதனையொட்டி, பெரண்டமடை காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாநில இணை செயலாளரும், பெருந்துறை தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் இருக்கைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கம்புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், பொன்முடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு, கலை பிரிவு மாவட்ட இணை செயலாளர் சரளை கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.