தருமபுரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப் -2ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

 
dharmapuri

தருமபுரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப் -2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்க உள்ளதாக ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது - தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னர்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் -2 ஏ, 2022  முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணி முதல் துவங்கப்பட உள்ளது.

TNPSC

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/MMrrs1T என்ற கூகுள் படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப் - 2ஏ 2002 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.