நாமக்கல்லில் வரும் 14ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
collector namakkal

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 14ஆம் தேதி ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற 14.09.2022 அன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற உள்ளது.

namakkal

எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரை சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.