நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
collector namakkal

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குப்பில் கூறியிருப்பதாவது - நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில், குறைவு காலிப்பணியிடமாக (shortfall Vacancy) சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து 21.01.2023 முதல் 31.01.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் கலை 10 மணி முதல் மாலை 5.45 மணி முடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் - ஈப்பு ஓட்டுநர், மொத்த பணியிடங்கள் - 1, இனசுழற்சி மற்றும் இடஒதுக்கீடு விவரங்கள் - பழங்குடியினர் (Schedule Tribes) மட்டும். வயது (01.07.2023 அன்று) - குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 42 வயதிற்கு முகாமில் இருக்க வேண்டும். கல்வித்தகுதி - 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு தகுதி - 1 தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2. வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் - ஊதிய அட்டவணையில் கிடை நிலை எண்.08. ரூ.19500 - 62000 என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயித்துள்ள படிகளுடன். விண்ணப்ப படிவம் - இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை namakkal.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.01.2023 பிற்பகல் 5.45 மணி வரை.

jobs

நிபந்தனைகள் - தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை  namakkal.nic.in என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.01.2023 முதல் 31.01.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் பெறத்தக்க வகையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண்.06, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் - 637003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப்படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.