அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
collector ariyalur

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு, ஆற்றுப்படுத்துநர் பதவிக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சி தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும், அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு  ஆற்றுப்படுத்துநர்  (Counsellor)தற்காலிக பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்பதவி பற்றிய மற்ற விவரங்கள் : ஒப்பந்த அடிப்படையில் ஒரு பதவிக்கு மாதம் ரூ.18,536/- தொகுப்பூதியமும், 1 வருட கால ஒப்பந்தத்திற்கு 40 வயதிற்குட்பட்ட பட்டதாரி  / முதுநிலை பட்டதாரிகள் (10+12+3 Pattern)(உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்) படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diploma in Counseling and Communication) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ariyalur

மேலும், தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் முன் அனுபவம் பெற்றிருக்கக்கூடிய தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 16.09.2022 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலுர் - 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.