சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி பலி... கரூர் அருகே சோகம்!

 
fire

கரூர் மாவட்டம் கடவூர் அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள மாவத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி பழனியம்மாள்(72). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மண் அடுப்பில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றி, உடல் ழுழுவதும் தீ பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் பழனியம்மாள் அலறி துடித்துள்ளார். அதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடிச்சென்று, அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

karur

இதனை அடுத்து, அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பழனியம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் பாலவிடுதி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.