கோவையில் அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து வேட்டைத்தடுப்பு காவலர் பலி!

 
dead

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் இன்று சீருடை அணிவகுப்பின்போது மயங்கி விழுந்த வேட்டைத்தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மூலக்காடு பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில்  வேட்டைத்தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று பெரியநாயக்கன் பாளைம் வனச்சரக வளாகத்தில், அனைத்து நிலை பணியாளர்களுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் மற்றும் அணிவகுப்பு பயிற்சி நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் பங்கேற்ற வேட்டைத்தடுப்பு காவலர் குமார், அணிவகுப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார்.

periyanayakkan palayam

உடனடியாக அவரை கோபினாரி பிரிவு வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக வேட்டைத்தடுப்பு காவலர் குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அணிவகுப்பின்போது வேட்டைத்தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.